துளசியின் மகிமை: ஒரு விரிவான பார்வை

By Web Admin |
Advertisement

இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசியின் மகத்துவத்தால் அந்த நீரும் மருத்துவ குணம் கொண்டதாக மாறும். வைணவ ஆலயங்களில் துளசி தீர்த்தம் நைவேதனமாக வழங்கப்படும். இதற்கு பெருமாள் தீர்த்தம் என்று பெயர்.

துளசிப் பூக்கள், இலைகள் யாவற்றிலும் துளசி இலையே மிகவும் சிறந்தது. மனிதர்கள் கோரியதை யெல்லாம் அளிக்கக் கூடிய சக்தி துளசியிடம் இருக்கிறது. துளசி மிகவும் பரிசுத்தமானது. பகவான் விஸ்ணுவிற்கு பிரியமானது. வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறது. துளசி பகவானிடம் பக்தியும், பிறகு முத்தியும் அளிக்கக்கூடியது. மகாவிஸ்ணுவிற்கு துளசியிடம் பிரியம் அதிகம். துளசி

Advertisement

வனம் உள்ள இடத்தில் பகவான் விஸ்ணு குடிகொண்டு விளங்குகிறார். துளசியை பூஜிப்பதும், அதனைப்பற்றி பாடுவதும், அதனை தியானம் செய்வதும், அதை மாடத்தில் வைத்து வளர்ப்பதும் சகல பாவங்களில் இருந்தும் விமோசனம் பெற்று சொர்க்க லோகத்தை அடையலாம்.

துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். தவிர பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அக்னி தேவர்கள் இருவர் மற்றும் புஷ்கரம் முதலிய தீர்த்தங்கள், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள், வாசுதேவர் போன்ற தேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர். துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். இதனால் தான் துளசி நீரால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

துளசி மாடத்தை மூன்று முறை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.

நமஸ் துளசி கல்யாணி,

Advertisement

நமோ விஷ்ணுப்ரியே சுபே

நமோ மோக்ஷப்ரதே தேவி

நமஸ் ஸம்பத் ப்ரதாயினே

துளசி சு-சகி-சுபே

பாப ஹாரிணி புண்யதே

நமஸ்தே நாதனுதே

நாராயண நமப்ரியே!

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement