மியான்மரில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பலி..!

By Web Admin |
Advertisement

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இறப்பு எண்ணிக்கை 2,056 ஐ எட்டியுள்ளதாக இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. 3,900 பேர் காயமடைந்துள்ளதாகவும், 270 பேர் இன்னும் காணவில்லை என்றும் கூறியுள்ளது.

இந்தியாவுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளன.

Advertisement

இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியோமியில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement