தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக ராகேஷ் அகர்வால் நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) புதிய தலைவராக ராகேஷ் அகர்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது.
By Web Admin |
Advertisement

தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) புதிய தலைவராக ராகேஷ் அகர்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ், 1994 ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்தவர். இதுவரை NIA-வில் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ள இவர், பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அனுபவம் பெற்றவர்.

மத்திய அமைச்சரவையின் (ACC) நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டது. ராகேஷ் அகர்வால் ஏற்கனவே சிறிது காலம் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இப்போது, முழு அளவிலான இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்பது NIA-வின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. ராகேஷ் அகர்வால் 2028 வரை இந்தப் பதவியில் நீடிப்பார்.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement