தமிழ்நாடு

இன்றைய (26-03-2024) தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உச்சத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நகை வாங்குவது என்பது சாமானிய மக்களின் கனவாகி விட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.49,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.0.30 காசுகள் குறைந்து ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty eight + = forty one

Back to top button
error: