Author: newsdesk

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு கூட்டம் ஆகஸ்டு 16ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க ஜூலை 27 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்று (ஜூலை 29) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையில் கலை மற்றும் அறிவியல் துறை படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

Read More

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார்.

Read More

உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, 5 மாத இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதம் முதல் சூரியகாந்தி எண்ணெயை உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யும் என்று சன்வின் குழுமம் தெரிவித்துள்ளது. முடிவடைந்த ஆண்டில் அக்டோபர் வரை இந்தியா 1.89 மில்லியன் டன் கச்சா சூரியகாந்தி எண்ணெயை வாங்கியுள்ளது. இதில் உக்ரைனில் இருந்து மட்டும் 74% இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Read More

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்காக ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4ஜி சேவை இல்லாத கிராமங்களில் 4ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 24,680 கிராமங்களில் இத்திட்டம் அமுலுக்கு வர உள்ள நிலையில், இதில் தமிழ்நாட்டில் 534 கிராமங்களும், புதுச்சேரியில் 1 கிராமமும் பயனடைய உள்ளது.

Read More

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி , புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Read More

உணவு உட்கொள்ளும் விஷயத்தில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் சில பிரச்சனைகள் எழுகின்றன. சாப்பிடாமல் இருப்பது, உண்மையில் பசி எடுக்காமல் இருப்பது, தெரியாமல் எதையாவது சாப்பிடுவது, அடிக்கடி பசி எடுப்பது என பல பிரச்சனைகள் உள்ளன. இவை எளிதில் அடையாளம் காணப்படுவதில்லை. அதிக எடை இழப்பு நோய்க்கு வழிவகுக்கும் அல்லது உடல் பருமனுக்கு அதிக எடை அதிகரிக்கும். தவறான உணவுப் பழக்கத்துடன் மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளும் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை அலட்சியப்படுத்தினால் உடல் நலம் கெடும். சாப்பிடுவது பற்றி நிபுணர்கள் கூறும் பிரச்சனைகள் இவை.. 1. அனோரெக்ஸியா நெர்வோசா இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவை ஒரு வெறுப்பு என்பது போல் செயல்படுகிறார்கள். பசிக்கிறதோ இல்லையோ வயிறு மாறும். இதனால் எடை படிப்படியாக குறையும். உடல் ரீதியாக அவர்கள் மிகவும் பலவீனமாகிறார்கள். 2. புலிமியா நெர்வோசா புலிமியா நெர்வோசா என்பது…

Read More

உலகின் முதல் 200 மெகாபிக்சல் கேமராவுடன் கூடிய மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான பல தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன. ஆகஸ்ட் 2 ஆம் தேதி சீனாவில் இந்த போன் வெளியிடப்படும் என்று மோட்டோரோலா அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய 200 மெகாபிக்சல் கேமராவை உள்ளடக்கியதாக சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நிறுவன ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பிசி மேக் மற்றும் வேறு சில தொழில்நுட்ப வலைத்தளங்கள் இந்த ஃபிளாக்ஷிப் போனின் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த விவரங்களின்படி, மோட்டோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் இவை. Moto X30 Pro ஃபோன் 6.67 இன்ச் பெரிய OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது எச்டி பிளஸ் தீர்மானம் கொண்டது. திரையில் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது. 200 மெகாபிக்சல் கேமராவுடன், 50 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் கேமராக்கள் இருக்கும்.…

Read More

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 20,409 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 22,697 பேர் கொரோனாவில் இருந்து மீட்டுள்ளனர்.. 47 பேர் இறந்தனர். தற்போது நாட்டில் 1,43,988 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய பாதிப்புகளின் சேர்க்கையுடன், இதுவரை பதிவான கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,39,79,730 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4,33,09,484 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 5,26,258 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விகிதம் 0.33 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 98.48 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.20 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை 2,03,60,46,307 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று 38,63,960 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Read More

விளாம்பழம் பல்வேறு வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டு பண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

Read More