இன்றைய ராசிபலன் (16-10-2025)
மேஷம்
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.
சிம்மம்
முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சனை சிலருக்கு வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
கன்னி
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சமங்களை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
தனுசு
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்பு சிலருக்கு அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை சிலருக்கு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
கும்பம்
செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
Posted in: ஜோதிடம்