
மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் சிலருக்கு ஆதாயம் உண்டு. வாகன வசதி உயரும். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுபொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
எதையும் சாதிக்கும்நாள். தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
கடகம்
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதர வகையில் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லை கள் ஏற்படும்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள் . வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக்கூடும் நாள்.
கன்னி
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
துலாம்
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்
சமயோசிதமாக சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவி பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.
தனுசு
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.
கும்பம்
கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும் . அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.