
மேஷம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
கடகம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்தபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
சிம்மம்
உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் இறுதியில் அலைச்சலுக்குப் பிறகு அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு சிலருக்கு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கன்னி
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். காதில் வாங்காதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். உங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். மொத்தத்தில், இன்று அதிக அளவில் பொறுமைத் தேவைப்படும் நாள்.
தனுசு
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
மகரம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கும்பம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.