இன்றைய ராசிபலன் (08-08-2025)
                மேஷம்
சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்
வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்த படியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
மிதுனம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.
கடகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
துலாம்
குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்
சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நிறைவான நாள்.
தனுசு
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
மகரம்
எதையும் சாதிக்கும்நாள். தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மீனம்
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர் நண்பர்களிடையே மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
Posted in: ஜோதிடம்