இன்றைய ராசிபலன் (23-07-2025)
இன்றைய நாள் (23-07-2025)
விசுவாவசு-ஆடி 7-புதன்-தேய்பிறை
நல்ல நேரம்
காலை 9:15 – 10:15
மாலை 4:45 – 5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45 – 11:45
மாலை 6:30 – 7:30
நட்சத்திரம்
திருவாதிரை மாலை 6.51 வரை பின்பு புனர்பூசம்.
சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)
அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன் :-
மேஷம்
தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . நல்லன நடக்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மன நிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நன்மை நடக்கும் நாள்.
மிதுனம்
சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கடகம்
குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
சிம்மம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதைதெரியும் நாள்.
கன்னி
கடந்த கால இனிய அனுபவங்களெல்லாம் நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள் . உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நிறைவான நாள்.
தனுசு
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். போராடி வெற்றி பெற வேண்டிய நாள்.
கும்பம்
குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
மீனம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
Posted in: ஜோதிடம்