மக்களவைத் தேர்தல்.. வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்!

 

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நாளை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனுடன், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் உள்ளது. எனவே வாக்காளர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் ஒரு நபர் வாக்களிக்க வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அவரது வாக்குச்சாவடி விவரம் அதில் குறிப்பிடப்படும்.

 

id proof1642329758140

வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கி உள்ள உடல்நல காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை, மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டும்.

 
 
Exit mobile version