முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியது!!

 

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அதன் வரலாற்றில் சாதனை வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 12.4 சதவீதம் அதிகமாக ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை, 2023 ஏப்ரலில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலித்ததே அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாய் ஆகும்.

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் 13.4 சதவீதம் அதிகரித்ததன் மூலம் அதிக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவே அதிகபட்ச மாதாந்திர வசூலாகும்.

 

அரசின் புள்ளிவிவரங்களின்படி, மதிப்பாய்வு செய்யப்பட்ட மாதத்தில், மொத்தம் ரூ. 2,10,267 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 43,846 கோடிகள், எஸ்ஜிஎஸ்டி ரூ. 53,538 கோடிகள், ஐஜிஎஸ்டி ரூ. 99,623 கோடிகள் , செஸ் ரூ. 13,260 கோடிகள் அடங்கும்.

இதுவரை பதிவு செய்யப்பட்ட முதல் 5 அதிக ஜிஎஸ்டி வசூல்..

 

2024, ஏப்ரல் – ரூ.2.10 லட்சம் கோடி

2023, ஏப்ரல் – ரூ.1.87 லட்சம் கோடி

2024, மார்ச் – ரூ.1.78 லட்சம் கோடி

2024, ஜனவரி – ரூ.1.74 லட்சம் கோடி

2023, அக்டோபர் – ரூ.1.72 லட்சம் கோடி

 
Exit mobile version