தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைவு

 

கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 01) ஒரு சவரன் ஒன்றுக்கு ரூ.920 குறைந்துள்ளது.

சென்னையில், 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080 ஆகவும், கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 
 
Exit mobile version