×

திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் – பரிகாரங்கள்

Link copied to clipboard!

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள் உண்டு. அந்த கண்பார்வைக்கு தீமைகளை விளைவிக்கும் அபார சக்தி உண்டு. இதை கண்திருஷ்டி தோஷம் என்கிறார்கள்.

மனிதனின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இவையே கண் திருஷ்டி வலிமை சேர்ப்பதாக கூறப்படுவதுண்டு. பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நல்லநிலைகள் போன்றவற்றை கண்டதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சல் ஏற்படக் கூடும்.

Advertisement

நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும், பொருமலும், பொறாமையும் வெடித்து சிதறும். இந்த கெட்ட எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வை சக்தி வாய்ந்தது. அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இப்படி நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களது பேச்சும் விஷத்தன்மை நிரம்பி காணப்படும்.

இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச் செய்கிறது. பணக்காரர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் மற்றவர்களால் திருஷ்டி தோஷம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் ‘கல்லடிபட்டாலும் படலாம். ஆனால், கண்ணடி மட்டும் படவே கூடாது’ என்பார்கள்.

இப்படி கண்ணடிபடுபவர்கள் பல வகைகளில் பாதிப்பை சந்திப்பார்கள். அவர்களுக்கு கண்திருஷ்டி கவனக்குறைவையும், மந்தத்தையும், நினைவாற்றலில் பிரச்சினைகளையும், நோய் நொடிகளையும் திடீரென்று ஏற்படுத்திவிடும். திருஷ்டியால் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரியாமலேயே இருக்கும். கண்திருஷ்டியால் ஏற்படும் நோய் நொடிகளுக்கு எந்த மருத்துவமும் சரியாக வேலை செய்யாது.

Advertisement

நம்மால் திறமையாக இருக்க முடியவில்லையே என்ற ஒருவிதமான இயலாமை உணர்வின் தாக்கம் கூட திருஷ்டியாக மாறி விடும். இதெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் அனுபவப்பட்டிருப்போம். இவ்வாறு திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்கள், இடையூறுகளை சந்திக்குமாறு பல எதிர்வினை சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். வாழ்வில் எல்லாமே எதிர்மாறாக நடைபெறுவதாக தோன்றும். இந்த இன்னல்களை விரட்ட வழிபாடுகளும், பரிகாரங்களும் பல விதங்களில் உள்ளன.

கண் திருஷ்டி விலக :

சுதர்ஷண எந்திரம் வாங்கி அதை பிரேம் போட்டு உங்கள் வாசற்படியின் மேல் உள்பக்கமாக மாட்டி வைக்கவும். மற்றவர்கள் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் உங்களை பாதுகாக்கும்.

Advertisement

ஸ்ரீசுதர்சன சக்கரம் : 

ஸ்ரீசுதர்சன சக்கரம் மந்திரித்து கழுத்தில் டாலர் போன்ற கட்டிக்கொள்வதால் தினசரி ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

Posted in: ஆன்மீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

flowers for god

தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்!!

பூக்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள்…

Link copied to clipboard!
வரலட்சுமி விரதம்

வரம் அருளும் வரலட்சுமி வழிபாடு

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது…

Link copied to clipboard!
யோக நரசிம்மர்

துஷ்ட சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வசக்திகள்

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல,…

Link copied to clipboard!
துளசி மாடம்

துளசியின் மகிமை: ஒரு விரிவான பார்வை

இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் பொது அர்ச்சனையாக…

Link copied to clipboard!
error: