இன்றைய ராசிபலன் (28-07-2025)
மேஷம்
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். காதில் வாங்காதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
கடகம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்
சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் . வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.
கன்னி
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.
துலாம்
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
தனுசு
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மன நிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நன்மை நடக்கும் நாள்.
மகரம்
கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
மீனம்
திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.
Posted in: ஜோதிடம்