ஜம்முவில் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அங்கு ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமான போக்குவரத்து, பெட்ரோலியம், சிவில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பான திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

 

இதற்கிடையில், ஜம்முவில் முதல் மின்சார ரயில் சேவையை சங்கலாடன்-பாரமுல்லா ரயில் நிலையத்திற்கு இடையே தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

 
 
Exit mobile version