நாளை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு!

 

இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அதன்படி, 2024-25ம் கல்வியாண்டில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு 557 நகரங்களில் நாளை (மே 5) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் 2024 பிப்.9 முதல் ஏப்.10ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நிலையில், 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடைபெற இருக்கிறது.

 
 
 
Exit mobile version