உங்கள் ஒரு வாக்கு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்: பிரதமர் மோடி

 

உங்களின் ஒற்றை வாக்கு இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அகமதாபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தனது வாக்குரிமையைப் பயன்படுத்திய பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்தியப் பிரதேசம் சென்றார். கார்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்களிடம் பேசிய மோடி, இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருவதாகவும், மத்தியப் பிரதேசத்தில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

உங்களின் ஒற்றை வாக்கு, நாட்டை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது மட்டுமின்றி, மக்களின் வருமானத்தையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் அதிகரிப்பதன் விளைவாக நாட்டை மேலும் சக்திவாய்ந்ததாக மாற்றும் என்று மோடி கூறினார்.

 

கடந்த காலத்தில் நீங்கள் அளித்த ஒரு வாக்கு இந்தியாவை உலகில் செல்வாக்கு மிக்க நாடாக மாற்றியது என்றார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது சாத்தியம் என்றும் மோடி விளக்கினார்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, பழங்குடியினப் பெண்ணுக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது, பல ஊழல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மோடி கூறினார்.

 

உங்களின் ஒற்றை வாக்கு பல இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்கு பல சிறந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று மோடி கூறினார். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் நீங்கள் எனக்கு வாக்களித்ததால் இவை அனைத்தும் சாத்தியமானது என்றார்.

 
Exit mobile version