லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: மாலை 5 மணி வரை 60.19% வாக்குப்பதிவு

 

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் கடும் வெயில் காரணமாக மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மாலை 5 மணி வரை 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, மாலை 5 மணி நிலவரப்படி, மாநிலங்கள் வாரியாக அசாமில் 74.86 சதவீதமும், பீகாரில் 56.01 சதவீதமும், சத்தீஸ்கரில் 66.87 சதவீதமும், தாதர் நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் 65.23 சதவீதமும், கோவாவில் 72.52 சதவீதமும், குஜராத்தில் 55.22 சதவீதமும், கர்நாடகாவில் 66.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ம.பி.யில் 66.05 சதவீதமும், மகாராஷ்டிராவில் 62.28 சதவீதமும், 53.40 சதவீதமும், உ.பி.யில் 55.13 சதவீதமும், வங்காளத்தில் 73.93 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 
 
Exit mobile version