ஒவ்வொரு நாளும் 1.5 பில்லியன் டன் உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஐ.நா வேதனை!!

 

ஒரு நாளைக்கு சராசரியாக 1 பில்லியன் டன் உணவுகள் வீணாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வேதனை தெரிவித்துள்ளது. உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கையை ஐ.நா வெளியிட்டது.

அதில் கடந்த 2022ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 1.5 பில்லியன் டன் வீதம், ஆண்டிற்கு 540 பில்லியன் டன் உணவுகள் வீணாக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளே அதிகம் வீணாக்கப்பட்டதாகவும், தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு 79 கிலோ உணவுகளை வீணாக்கியதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

 

உணவுகள் பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்களே வீணாக்குவதாக கூறிய ஐ.நா, அவர்கள் உணவில்லாமல் இருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளது. இதில் உணவு குறைவாக வீணடிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான் முதன்மை பெருவதாகவும் தெரிவித்தது.

 
 
Exit mobile version