டெஸ்லா நிறுவனத்தில் 14,000 பேர் பணிநீக்கம்..!

 

முன்னனி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு (EV) நிறுவனமான டெஸ்லா மிகப்பெரிய பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிறுவனத்தில் உள்ள 14,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்திற்கு சமம். நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், பணிநீக்கம் குறித்து ஊழியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுதவிர, செலவுகளை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு கடினமானது ஆனால் தவறானது அல்ல என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். மீதமுள்ள ஊழியர்களும் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 
 
Exit mobile version