கூகுளுக்கு ரூ.407 கோடி அபராதம் விதித்த ரஷ்ய நீதிமன்றம்!

கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் ரூ.407 கோடி அபராதம் விதித்தது.

 

கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் ரூ.407 கோடி அபராதம் விதித்தது.

ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப்(YouTube) வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ அறிவுத்தியுள்ளது. ஆனால் அதனை நீக்க கூகுள் நிறுவனம் மறுத்துவிட்டது.

 

நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது. மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூபாய் 407 கோடி (49 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது.

 
 
Exit mobile version