இஸ்ரேல்: பிரதமர் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!

 

இஸ்ரேல்-ஹமாஸ் போர் அரையாண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலில் அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

பிரதமர் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டங்களில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவில் வீதிகளில் இறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல் அவிவ் நகரில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர்.

 

இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸாவில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றனர். பின்னர், 250 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அன்று முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில் இதுவரை 33,137 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும் பலன் இல்லை. மறுபுறம், காஸாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அங்குள்ள மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

 
 
Exit mobile version