ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு

 

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அன்றைய தினம் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், சுனாமி அலைகள் தாக்கியதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக 33 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இன்றி தவித்தன. மேலும், சுனாமி அலைகளால் கார்கள் மற்றும் சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், நாடு முழுவதும் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்பட பல முக்கிய வழித்தடங்கள் முடங்கின. இதனால், மருத்துவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது.

 
 
Exit mobile version