தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 05) சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் அதிரடி ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இதன்படி இன்று தங்கம் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது.

 

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080 ஆக உள்ளது. இதேபோல் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510 ஆக உள்ளது.

தங்கம் விலை குறைந்திருக்கும் நிலையில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.85,000க்கும், கிராமுக்கு ரூ.0.30 காசுகள் குறைந்து ரூ‌.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
 
 
Exit mobile version