ஒரு முட்டை 32 ரூபாய்.. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்!!

 

பாகிஸ்தான் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது. பலருக்கு இரண்டு வேளை கூட சாப்பிட முடியாத நிலை உள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

கோழி முட்டை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்றால் நிலைமையை புரிந்து கொள்ளலாம். பாகிஸ்தானின் பல பகுதிகளில் முட்டை விலை ரூ.32-ஐ எட்டியுள்ளது. ஒரு டஜன் முட்டை, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில பகுதிகளில் 390 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 
 
 
Exit mobile version