கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.340 ஆக நிர்ணயம்

 

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 25 ரூபாய் உயா்த்தி 340 ரூபாயாக நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபா் முதல் தொடங்கும் பயிர்க்காலத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 325-லிருந்து 340 ரூபாயாக உயா்த்த அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றார். மேலும் விண்வெளித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 
 
Exit mobile version