வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு

 

வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதன் விலையை கட்டுக்குள் வைக்க வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை கடந்தது. விலை உயர்வை தொடர்ந்து தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவித்ததோடு, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.

 

கடும் குளிர் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி வரை வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

 
 
Exit mobile version