அதிகமாக இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

 

இயர்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் அலுவலகத்திற்குச் சென்றாலும், ஏதாவது வேலைக்காக வெளியே சென்றாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் உங்கள் காதுகளில் இயர்போன்கள் கண்டிப்பாக இருக்கும்.

சிலர் மணிக்கணக்கில் இயர்போன் மாட்டிக்கொண்டு போனில் பேசிக்கொண்டும் பாட்டு கேட்பார்கள். இப்படி செய்வது நல்லதல்ல. இதனால் எரிச்சல், தலைவலி மட்டுமின்றி, மனச்சோர்வும் ஏற்படுகிறது.

 

மேலும், 60 டெசிபலுக்கு மேல் சத்தம் யாருக்கும் தீங்கு விளைவிக்கும். 70 முதல் 80 டெசிபல் வரையிலான ஒலியை தொடர்ந்து வெளிப்படுத்துவது காது கேளாத தன்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு 20 முறை 20 நிமிடங்களுக்கு 90 டெசிபலுக்கு மேல் கேட்டால் காது கேளாமை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 
 
 
Exit mobile version