இந்த பழங்களை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்!!

 

பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கிறார்கள், அத்துறை நிபுணர்கள்… எனவே தூங்கி எழுந்ததும் இந்தப் பழங்களை எல்லாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்பதே அவர்கள் கூறும் அறிவுரையாக இருக்கிறது. அது என்ன பழங்கள் என்று பார்க்கலாம் வாங்க..

திராட்சை பழங்கள்: அதிக இனிப்பு சத்துக்களைக் கொண்ட திராட்சை பழமும் இந்தப் பட்டியலில் சேருகிறது. திராட்சை பழங்களும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படக்கூடுமாம். எனவே அதையும் காலையில் எழுந்ததும் உணவுக்கு முன்பாக சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.

 

ஆரஞ்சு, எலுமிச்சை: சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உகந்தது இல்லையாம். ஏனெனில், இந்த இரண்டிலுமே உள்ள அமிலங்கள் உடல் நலக்குறைவை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது. அதேபோல அண்ணாச்சி பழத்திலும் பிரக்டோஸ் என்று சொல்லப்படும் ஒரு வித இனிப்புச் சத்து இருப்பதால் இதையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.

வாழைப்பழம்: பழங்களில் மிகவும் மலிவானதாகவும் சத்துக்கள் நிறைந்ததும் எதுவென்றால் வாழைப்பழங்கள்தான். பலரும் தினமும் வாழைப்பழங்கள் சாப்பிடாமல் இருக்கவே மாட்டர்கள். வாழைப்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும். முலாம்பழத்தையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது இன்சுலின் அளவை அதிகரித்து விடும்.

 

கொய்யாப்பழம்: வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் கொண்டது கொய்யாப்பழம். கொய்யா மரங்களை பல வீடுகளிலும் காண முடியும். அதுவும் கிராமத்தில் கொய்யா மரம் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். கொய்யாபழத்தை பொறுத்தவரை நார்ச்சத்துக்களும் நிறைந்தது. எனவே இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சினைகள் வரக்கூடுமாம். கிவி பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டல் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதோடு அமிலதன்மை பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதேபோல் பப்பாளி பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மாம்பழம்: மாம்பழங்கள் முக்கனிகளில் ஒன்று. அதன் ருசியே தனிதான். அதுவும் தற்போது கோடைக்காலத்தில் மாம்பழ சீசன் என்பதால் பழக்கடைகளில் புகுந்த உடனேயே மலை போல மாம்பழங்களைத்தான் குவித்து வைத்து இருக்கிறார்கள். மாம்பழங்களை விரும்பி அனைவரும் வாங்கி வீட்டில் கொண்டு போய் ஒரு ருசி பார்த்து விடுகிறார்கள். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த மாம்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

 
 
Exit mobile version