ஈரான் மீது அமெரிக்கா தடை.. விரைவில் அறிவிப்பு

 

இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதலை நடத்திய ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க வல்லரசு நாடான அமெரிக்கா தயாராக உள்ளது.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டங்களுக்கு விரைவில் புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர் குழுக்களும் இந்த தடைகளின் கீழ் வரலாம் என்று அறிவித்தார்.

ஈரானுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் தயாராகி வருவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் எலன் கூறியதை அடுத்து சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மறுபுறம், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெலும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கச் செயல்படுவதாகக் கூறினார்.

 
 
Exit mobile version