Ph.D. சேர்க்கையில் புதிய நடைமுறை – பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம்

 

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) Ph.D. சேர்க்கை தொடர்பான முக்கிய முடிவை அறிவித்துள்ளது. அதாவது நான்கு வருட இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இப்போது நேரடியாக UGC – NET தேர்வில் கலந்து கொள்ளலாம், எனவே அவர்கள் Ph.D. படிப்பில் நேரடியாக சேரலாம். இந்த விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் உள்ள பாடங்களைப் பொருட்படுத்தாமல் தாங்கள் விரும்பும் பாடங்களில் Ph.D. செய்யலாம் என்று விளக்கமளித்துள்ளது.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) இருந்தாலும் இல்லாவிட்டாலும், Ph.D. படிப்பை மேற்கொள்வதற்கு நான்காண்டு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான மதிப்பெண்கள் போதுமானது என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெளிவுபடுத்தினார்.

 

SC/ST/OBC, ஊனமுற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் இதர பிரிவினருக்கு 5% மதிப்பெண்கள்/கிரேடுகளில் தளர்வு உண்டு. யுஜிசி நெட் (ஜூன்) அமர்வு தேர்வில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என்றார்.

 
 
Exit mobile version