உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு சர்பத் செய்யலாம் வாங்க..!

 

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் வெப்பத்தை தாங்க முடியாமல் பல வகையான குளிர்ச்சி பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் இன்று நாம் கோடை கால ஸ்பெஷல் நுங்கு சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 

நுங்கு – 5

எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன்

 

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

சர்பத் சாறு – 2 டேபிள் ஸ்பூன்

 

சப்ஜா விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைககளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவிடுங்கள். இதன்பின் நாம் எடுத்து வைத்துள்ள 5 நுங்கினை எடுத்து அதன் உள்ளே உள்ள தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு அதனுடைய தோல்களை நீக்கி விட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் சர்பத் சாறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாம் முன்னரே ஊற வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது நமது கோடை கால ஸ்பெஷல் நுங்கு சர்பத் ரெடி..!

 
Exit mobile version