சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி..?

 

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சாமை சாம்பார் சாதம் எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

 

சாமை அரிசி – அரை கப்

துவரம் பருப்பு – கால் கப்

 

புளித் தண்ணீர் – கால் கப்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

 

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

வர மல்லி – அரை அல்லது ஒரு டீஸ்பூன்

தக்காளி – 1

அனைத்தும் கலந்த காய்கறிகள் – 1 கப்

சின்ன வெங்காயம் – 10

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

சீரகம் – கால் டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு – 5

கருவேப்பில்லை – தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசியை தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும். இப்போது ஒரு குக்கரில் பருப்பு, பூண்டு, மஞ்சள் தூள், தண்ணீர் ஆகிய இவற்றை சேர்த்து நான்கு விசில் வரும் வரையில் நன்கு வேகவைக்கவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், வர மல்லி ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்னர் ஆறவைத்துப் பொடியாக்கவும்.

இப்போது ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை, தக்காளி ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் நறுக்கிய காய்கறிகள், உப்பு ஆகிய இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது வேக வைத்து மசித்த பருப்பு மற்றும் தண்ணீரை சேர்த்துக் கொதிக்க விடவும்.

இப்போது புளித்த தண்ணீர், சாமை அரிசி, வறுத்து அரைத்த சாம்பார் பொடி, அரை கப் தண்ணீர் ஆகிய இவற்றை சேர்த்து இரண்டு விசில் சத்தம் வரும் வரையில் நன்கு வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி கடுகு, பெருங்காயம், முந்திரிப் பருப்பு, கறிவேப்பில்லை ஆகிய இவற்றை சேர்த்துத் தாளிக்கவும்.

பின்னர் வேகவைத்த சாமை பருப்பு சாதத்துடன் கொத்தமல்லியைத் தூவி, நெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி பரிமாறவும்.

இதோ இப்போது சுவையான சாமை சாம்பார் சாதம் தயார்.

 
Exit mobile version