மசாலா டீ இப்படி செய்தால் சுவையோ சுவை!

 

குளிர்காலத்தில் இருக்கும் குளிருக்கு சூடான கார சாரமான டீ குடித்தால் இதமாக இருக்கும். அதுவும் மசாலா டீ என்றால் தனிச்சுவை தான். சரி வாருங்கள் மசாலா டீ எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 

மிளகு- 4
லவங்கப்பூ- 1
சுருள் பட்டை- 1
ஏலக்காய்- 2
பால்- ஒரு கப்
டீ தூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி- சிறிய துண்டு
மாசிக்காய்- ஒரு சிட்டிகை
புதினா- நான்கு இலைகள்
தண்ணீர்- ஒன்றரை கப்
சர்க்கரை- தேவையான அளவு

இவை அனைத்தும் இரண்டு பேருக்கான அளவுகள்.

 

செய்முறை:

இஞ்சி, மிளகு, ஏலக்காய், மாசிக்காய், சுருள் பட்டை, புதினா இலைகள், லவங்கப்பூ போன்றவற்றை ஒன்றும் பாதியுமாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை சுட வைக்க வேண்டும். அதில் நாம் தட்டி எடுத்த மாசாலா பொருள்களை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் அதில் நீங்கள் பயன்படுத்தும் டீ தூளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் முன்பே காய வைத்து எடுத்த ஒரு கப் பாலினை சேர்க்க வேண்டும். 3 முதல் ஐந்து நிமிடங்கள் மாசாலாவுடன் பால் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வடிகட்டி இறக்க வேண்டும்.

மசாலா டீயை உடனே பருக கொடுத்தால், சூடாகவும் கார சாரமாகவும் இருக்கும். இதனுடன் இணை ஏதேனும் வேண்டுமானால் இனிப்பு அல்லது காரமான சிற்றுண்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

 
Exit mobile version