இந்த குளிருக்கு சுவையான செட்டிநாடு ஸ்டைலில் காரக்குழம்பு வைப்பது எப்படி?

 

அன்றாடம் சாம்பார், காரக்குழம்பு மட்டுமே செய்து நமக்கும், அவற்றை உண்பவர்களுக்கும் நிச்சயம் போர் அடித்திருக்கும். வேறு என்ன தான் செய்வது? வித்தியாசமாக செய்ய வேண்டும் என்றால், இதிலும் இருக்கிறது நமது செட்டிநாடு சமையல். சற்று வித்தியாசமான முறையில் சமைத்தால் நிச்சயம் கைப்பக்குவம் மாறும்..

அது தான் நல்லெண்ணையில் மிதக்கும் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் காரக்குழம்பு. வாருங்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

 

தேவையான பொருள்கள்:

கத்திரிக்காய்- 3
உருளைக்கிழங்கு- 2
வெல்லம்- ஒரு மேசைக்கரண்டி
புளிச்சாறு- ஒரு கப்
சின்ன வெங்காயம்- 5 முதல் 10 எண்கள்
தக்காளி- 2
பூண்டு- 5 பற்கள்
துருவிய தேங்காய்- கால் கப்
மல்லி- 2 தேக்கரண்டி
சோம்பு- கால் தேக்கரண்டி
வரமிளகாய்- 3
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை- சிறிதளவு
உப்பு, தண்ணீர்- தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் காய்களை உங்கள் விருப்பம் போல் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, பூண்டு போன்றவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.

 

ஒரு கடாயில் வெந்தயம், மல்லி, சோம்பு, வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். பின்பு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடத்தில் இறக்கி வைத்துவிட வேண்டும். இது சற்று குளிர்ந்ததும் உடனே சற்று தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் ஒரு குக்கரில், எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்ந்து பொன்னிறமாகவும் வரை வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழையும் வரை வதக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து அதனுடன், உருளைக்கிழக்கு, கத்திரிக்காய் சேர்த்து அதோடு, வெல்லம் மாற்று புளிக்கரைசலை சேர்க்க வேண்டும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, 3 விசில்கள் விட்டு இறக்க வேண்டும்.

இதையடுத்து ஒரு கடாயில் மீண்டும் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து குக்கரில் சேர்த்தால் அவ்வளவு தான்.

நல்லெண்ணெய் மணக்கும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு காரக்குழம்பு தயார். குளிரில் சூடான சோறுடன் சாப்பிட்டால் இணை அள்ளும்..

 
Exit mobile version