ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம்..!

 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி வருகிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
Exit mobile version