புஷ்பா-2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

 

டோலிவுட் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் சுகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள புஷ்பா-2 படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகவுள்ளது.

புஷ்பா-2 படத்தின் புஷ்பா புஷ்பா பாடல் இன்று (மே 1) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். தேவி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியின் முந்தைய படங்கள் அனைத்தும் மியூசிக்கல் ஹிட். இந்நிலையில், இன்று வெளியாகும் லிரிக்கல் வீடியோவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மைத்ரி மூவிஸ் பேனரில் உருவாகி வரும் புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

 
 
 
Exit mobile version