தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தி கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 
 
 
Exit mobile version