73 வயதில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த்.. குடும்பத்தினருடன் கொண்டாடும் புகைப்படம் வைரல்!!

 

சூப்பர் ஸ்டார் இன்று தனது 73வது பிறந்தநாளை குடும்பத்தினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 1950 டிசம்பர் 12ஆம் தேதி அன்று பெங்களூரில் பிறந்த ரஜினிகாந்த் ஐந்து வயது இருக்கும் பொழுது அவருடைய தாயார் இறந்து விட்டார்.

எனவே குடும்பத்தின் நிலைமை மோசமாக இருந்ததால் சுமை தாங்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த ரஜினிகாந்த் பிறகு பஸ் கண்டக்டர் வேலையை தொடர்ந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் நடிகராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது அவருடைய நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் ரஜினிகாந்தின் ஆசை குறித்து தெரிய மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேருமாறு கூறியுள்ளார்.

 

இதன் மூலம் 1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து உள்ளது. மேலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என விருப்பப்பட்ட ரஜினி பில்லா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்து பிரபலமானார்.

இதன் மூலம் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்த ரஜினி ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வென்றார். கருப்பாக இருந்தாலும் இவருடைய ஸ்டைல், நடிப்பு, நடனம் போன்றவை ரசிகர்களை கவர்ந்தது எனவே ரசிகர்கள் இவரை கொண்டாடத் தொடங்கினர்.

 

இவ்வாறு தற்பொழுது 73 வயதை தொட்டிருக்கும் நிலையில் தற்போது வரையிலும் படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

 

அப்படி கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான செய்த பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது இந்த படங்களை தொடர்ந்து மேலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
Exit mobile version