இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ் திரைப்படங்கள்!!

 

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் விஜய்யின் லியோ உட்பட 5 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படியாக திரையரங்குகளில் கொண்டாடப்படும் படங்கள் சில வாரங்கள் கழித்து ஓடிடி-யில் வெளியாகுவது வழக்கம் அந்த வகையில் திரையரங்குகளில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியான வாரமாக அமைந்துள்ளது. அதாவது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் அக்டோபர் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லியோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.

அதேபோல் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ ஹாட்ஸ்டார், ‘தி வில்லேஜ்’ அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. மேலும் ஆஹா ஓடிடியில் ‘டெமன்’ மற்றும் சோனி லைவ் ஓடிடியில் ‘சத்திய சோதனை’ ஆகிய தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

 
 
 
Exit mobile version