Realme தனது புதிய டேப்லெட் Realme Pad 2 Lite மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் 10.5 இன்ச் 2K LCD திரை, 90Hz புதுப்பிப்பு வீதம், 450 நிட்ஸ் பிரைட்னஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
MediaTek Helio G99 ப்ராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வேகன் லெதர் ஃபினிஷுடன், புதிய Realme Tab 8300 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
புகைப்படம் எடுக்க, 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. டேப்லெட்டின் விளிம்பில் கைரேகை சென்சார் உள்ளது. அத்துடன் USB Type-C ஆடியோ மற்றும் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
இணைப்பு விருப்பங்களில் Wi-Fi, Bluetooth 5.3, USB Type-C ஆகியவை அடங்கும். டேப்லெட் ஸ்பேஸ் கிரே, நெபுலா பர்பில் வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.14,999 மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.16,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.