நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா, சமீபத்தில் புதிய 5ஜி மொபைலை வெளியிட்டுள்ளது. இது Lava Yuva 2 5G என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களை கவரும் வகையில் பிரீமியம் மார்பிள் டிசைனுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறுவனம் 4ஜிபி+128ஜிபி வகையின் விலையை ரூ. 9,499 என நிறுவனம் முடிவு செய்துள்ளது. Marble White மற்றும் Marble Black ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.
இந்த போன் வாங்கிய ஓராண்டுக்குள் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், சர்வீஸ் சென்டருக்குச் செல்லாமல் நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து இலவச சேவை வழங்குவார்கள்.
லாவாவின் புதிய 5ஜி போனின் அம்சங்கள்:-
- 6.67 இன்ச் HD+ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்.
- 90Hz புதுப்பிப்பு வீதம், 700நிட்ஸ் உயர் பிரகாசம்.
- UNISOC T760 octa-core செயலியில் இயங்குகிறது.
- ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் வேலை செய்கிறது.
- கேமராவைப் பொறுத்த வரையில், பின்புறத்தில் 50MP AI இரட்டை கேமரா மற்றும் 2MP சென்சார் கேமரா உள்ளது.
- செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8MP முன் கேமரா.
- இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mah பேட்டரியைக் கொண்டுள்ளது.
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.