இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிப்பார். ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில்தான் தற்போது வருவாய்த்துறை செயலராக பணியாற்றி வரும் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பை மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் வரும் 26ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்கிறார். இவரது பதவிக்காலம் 11-12-204 முதல் 11-12-2027 வரை இருக்கும்.
சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2018 இல் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2021ல் முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு அவரது பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்தது. அதாவது சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக மொத்தம் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த பொறுப்புகளை வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.
சஞ்சய் மல்ஹோத்ரா கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) கணினி அறிவியலில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, இந்தியா திரும்பிய பிறகு, அவர் சிவில் மீது ஆர்வம் காட்டினார். இறுதியாக, 1990ல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.