நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பெரும் சாதனை அளவை எட்டியுள்ளது.
வெளியான ஆறு நாட்களில் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இத்தகவலை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமீபத்தில் இது குறித்து ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
THE BIGGEST INDIAN FILM rewrites history at the box office 💥💥💥#Pushpa2TheRule becomes the FASTEST INDIAN FILM to cross 1000 CRORES GROSS WORLDWIDE in 6 days❤🔥#PUSHPA2HitsFastest1000Cr
Sukumar redefines commercial cinema 🔥
Book your tickets now!
🎟️… pic.twitter.com/GLsTv9LeGO— Mythri Movie Makers (@MythriOfficial) December 11, 2024
மொத்தம் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்தியில் இந்த படத்தின் வசூல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட்டில் ஆறு நாட்களில் இப்படம் ரூ. 375 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் திரையுலக வரலாற்றில் ரூ.1000 கோடி என்ற மைல்கல்லை எட்டிய 8வது படம் என்ற பெருமையை புஷ்பா-2 பெற்றது. இதற்கு முன், தங்கல், பாகுபலி-2, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2, ஜவான், பதான், கல்கி 2898 ஆகிய படங்கள் இந்த பெருமையை பெற்றுள்ளன.