December 19, 2024
பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமது அல் ஜாபரின் அழைப்பின் பேரில் மோடி அரசுமுறை பயணமாக குவைத் செல்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியா மற்றும் குவைத் இடையேயான பரஸ்பர நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிகிறது.
கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.