இந்திய பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) பல்வேறு பணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 518 Non-Executive Cadre பணியிடங்கள் நிரப்பப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nalcoindia.com/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை டிசம்பர் 31 முதல் ஜனவரி 21 வரை தொடரும்.
பதவிகள், காலியிடங்கள்:
Non-Executive Cadre – 518
கல்வித் தகுதி:
பணியைத் தொடந்து சம்பந்தப்பட்ட துறையில் 10ம் வகுப்பு, இடைநிலை, ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
27 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/EWS/OBC வேட்பாளர்களுக்கு ரூ. 100, மீதமுள்ள பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
தேர்வு செயல்முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு https://nalcoindia.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.