ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அட்டவணை அறிவிக்கப்பட்டது. இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அடுத்த ஆண்டு 2025 பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும்.
2025 சாம்பியன்ஸ் டிராபி குழுக்கள்:
குரூப்-A: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப்-B: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் முழுமையான பட்டியல்:
பிப்ரவரி 19- பாகிஸ்தான் Vs நியூசிலாந்து, கராச்சி
பிப்ரவரி 20- இந்தியா Vs வங்கதேசம், துபாய்
பிப்ரவரி 21- ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா, கராச்சி
பிப்ரவரி 22- ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து, லாகூர்
பிப்ரவரி 23- இந்தியா Vs பாகிஸ்தான், துபாய்
பிப்ரவரி 24- பங்களாதேஷ் Vs நியூசிலாந்து, ராவல்பிண்டி
பிப்ரவரி 25- ஆஸ்திரேலியா Vs தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி
பிப்ரவரி 26- ஆப்கானிஸ்தான் Vs இங்கிலாந்து
பிப்ரவரி 27- பாகிஸ்தான் Vs வங்கதேசம், ராவல்பிண்டி
பிப்ரவரி 28- ஆப்கானிஸ்தான் Vs ஆஸ்திரேலியா, லாகூர்
மார்ச் 1 தென்னாப்பிரிக்கா Vs இங்கிலாந்து, கராச்சி
மார்ச் 2 – இந்தியா Vs நியூசிலாந்து, துபாய்
மார்ச் 4 – துபாயில் அரையிறுதி 1
மார்ச் 5 – லாகூரில் அரையிறுதி 2
மார்ச் 9- லாகூரில் இறுதிப் போட்டி (இந்தியா தகுதி பெற்றால், இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும்).
மார்ச் 10- ரிசர்வ் டே.
அனைத்து நாடுகளின் கிரிக்கெட் பிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கிரிக்கெட் போட்டி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் பிரியர்களும் ஆவலுடன் காத்திருக்கும் போட்டி ஒன்று உள்ளது, அதுதான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட்டில் எந்தப் போட்டியை எடுத்தாலும்… இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் அந்த மேட்ச் மோகம் வேறு. போட்டி நடைபெறும் நாளில் போட்டியை ஒளிபரப்பும் ஸ்போர்ட்ஸ் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கைப் பார்த்தால் இது புரியும். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது.