நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் தனது EV வணிகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
மின்சார இரு சக்கர வாகனப் பிரிவில் ஓலா, டிவிஎஸ் மற்றும் ஏத்தர் போன்ற போட்டியாளர்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் பஜாஜ், அதன் விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, புதிய சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Chetak EV) இம்மாதம் (டிசம்பர்) 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும்.. ரூ. 1,00,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையில், பஜாஜ் ஜனவரி 14, 2020 அன்று இந்திய சந்தையில் முதல் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. அப்போது, EV துறையில் ஸ்கூட்டர் விற்பனை குறைவாக இருந்த நிலையில், அதன் பிறகு புதிய மாடல்கள் மற்றும் கட்டணக் குறைப்பு காரணமாக விற்பனை அதிகரித்தது.
நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் சேடக் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை, மூன்று லட்சத்திற்கும் அதிகமான பஜாஜ் சேடக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விவரங்களை நிறுவனம் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.