இன்றைய காலக்கட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் பொருளாதாரம் மிக முக்கியமானது, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலைக்குச் சென்றால் முடிந்தவரை குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளலாம்.
எனினும், சில சமயங்களில் வருமானத்திற்கு அதிகமாக குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத பணக் கஷ்டத்தால் மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டியுள்ளது.
அப்படி கடன் வாங்கியவர்கள் வட்டிக்கு பாதி வாழ்வை வீணடித்து விடுவார்கள். இப்படி ஆனவர்கள் கடவுள் மீது முழு நம்பிக்கை கொண்டு கீழ்க்கண்ட பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம் கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் வெளிவரலாம்.
கடனில் இருந்து விடுபட, ‘சிவாய நாம ஓம்’ என்கிற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது சிறந்த பலனைத் தரும். சிவ நாமத்தை உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் எந்த துன்பமும் ஏற்படாது. இப்படி சிவபெருமானுக்கு ஐஸ்வர்யம் தரும் வில்வ இலையை வைத்து பரிகாரம் செய்தால் கடன் பிரச்சினை உடனே நீங்கும்.
ஒரு வில்வ இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை எழுதி கொள்ளுங்கள். பின் வில்வ இலையை சுருட்டி நூலால் இறுகக் கட்டி பூஜையறையில் வைத்து உங்கள் கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் என பிராத்தனை செய்யுங்கள்.
அதன் பிறகு, கோவிலுக்குச் சென்று மூலஸ்தானத்தில் நின்று மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகளை வேண்டி என் கடன் எல்லாம் தீர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த இலையை கோயிலில் உள்ள வேப்ப மரத்தின் மேல் வடக்கு நோக்கிக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வின் கடன்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.